75 ரூபாவை விட கூடுதலான விலையில் தேங்காய் விற்பனை செய்த 119 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.
அதிக விலையில் தேங்காயை விற்பனை செய்வோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பை அண்டியுள்ள பகுதிகளிலிருந்தே அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஹசித திலகரத்ன சுட்டிக்காட்டினார்.
சந்தைகளிலும் தேங்காயின் தரம் மற்றும் விலை தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.