தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு தலா 56 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து தேசிய சரணாலயத்தில் கெப் ரக வாகனமொன்றின்மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் இன்று இந்த தண்டனை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மன்னார், சாவகச்சேரி, வவுனியா மற்றும் புத்தளம் முதலான பகுதிகளைச் சேர்ந்த தமிழீழ விடுதலைக் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எட்டு குற்றச்சாட்டுக்களின்கீழ், சட்டமா அதிபரால் தனித்தனியாக அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஆய்வுப்பணியொன்றுக்காக குறித்த மருத்துவர் உட்பட சுற்றுலா பயணிகள் ஏழு பேர் பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனம் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.