மொகாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடி இரட்டை சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
நாணயச்சுழச்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்து இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்ககெட்டுக்களை மாத்திரம் இழந்து 392 ஓட்டங்களை எடுத்தது.
இதனை தொடர்ந்து கடடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்க்ள நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக அஞ்சலே மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றுள்ளார்.