கின்னஸ் சாதனைக்கென நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் உயரமான கிறிஸ்மஸ் மரம் கடந்த வருடம் 24ஆம் திகதி நள்ளிரவு வெற்றிகரமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று குறித்த மரம் கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றதுன், சான்றிதலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன், மரத்தினை அழகாக நிர்மாணித்தவர்களும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் ஏற்பாட்டில் தனியார் நிதியீட்டில் 57 மீற்றர் (187 அடி) உயரமான குறித்த மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மரத்தில் சுமார் 60ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டதுடன், நத்தார் தாத்தா உருவமும் இந்த மரத்தில் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.