இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 208 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த இரட்டை சதத்தின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனைகள் படைத்து இருக்கிறார். அவருக்கு இணையம் முழுக்க வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
மேலும் இன்று அவருக்கு திருமண நாள் என்பதால் அதற்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையிடம் இந்தியா பட்ட அவமானத்திற்கு இதன் மூலம் பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.
ரோஹித் சர்மா இதற்கு முன்பே இரட்டை சதம் அடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 209 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக 264 ஓட்டங்கள் அதிகபட்சமாக அடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் தொடரில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர் மட்டும்தான்.
இன்று ரோஹித் சர்மாவின் திருமண நாள் ஆகும்.
இந்த போட்டியை காண்பதற்காக ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே வந்திருந்தார்.
ரோஹித் ஒவ்வொரு ஓட்டமாக அடிக்கும் போதும் அதிக பதட்டம் அடைந்தது இவர்தான்.
ரோஹித் 190 ஓட்டங்களுக்கு மேல் இருந்த போது ரசிகர்களை விட இவர்தான் அதிக பதட்டமாக இருந்தார்.
ரோஹித் இரட்டை சதம் அடித்ததை பார்த்து இவர் கண்ணீர் விட்டார். ரோஹித் களத்தில் இருந்து இவரை நோக்கி பேட்டை தூக்கி காட்டினார்.
ரோஹித் முதல் 100 ஓட்டங்களை அடிக்க மட்டுமே அதிக பந்துகளை எடுத்துக் கொண்டார்.
ஆனால் கடைசி 100 ஓட்டங்களையும் வெறும் 35 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார்.
இவரது இந்த சாதனையை இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.