93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்பதற்காக கால அவகாசம் நாளை நண்பகலுடன் முடிவடைகிறது.
நாட்டில் உள்ள 93 உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளை நண்பகல் 12 முடிவடைந்தது.
கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் கட்டுப்பணம் செலுத்த வசதியளிக்கப்பட்டிருந்தது. 93 உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்பதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணிக்கு முடிவடையும்.
இரண்டாவது கட்டடத்தின் கீழ் 248 உள்ளுராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக கால அவகாசம் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 20 ஆம் திகதி புதன்கிழமை முடிவடையும்.
வேட்பு மனுக்கள் திங்கட்கிழமை தொடக்கம் 21 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
முதல் கட்டடத்தின் கீழ் ஏழு மாநகரசபைகள் 18 நகர சபைகள் 68 பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்படும்.
இரண்டாவது கட்டத்தின் கீழ் 17 மாநகர சபைகள் 23 நகர சபைகள் 208 பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.