டச்சு நாட்டைச் சேர்ந்த 19வயது மாடல் அழகி மலேசியாவில் 20வது மாடியில் இருந்து நிர்வாணமாக விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டச்சு நாட்டை சேர்ந்த இவானா என்ற 19 வயதுடைய மாடல் அழகி மலேசியாவில் 20வது மாடியில் இருந்து நிர்வாணமாக விழுந்து பலியாகியுள்ளார்.
இவரது உடல் அதே கட்டிடத்தின் 6வது மாடியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்ப்வம் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
மலேசிய பொலீஸார் இவானா குடிபோதையில் விழுந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மலேசியாவில் உள்ள டச்சு தூதரகம், இவானா மரணம் குறித்து சர்வதேச காவல்துறை ஆணையத்திடம் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
மலேசிய பொலீஸார் இவானா மரணத்திற்கு கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றும் அவர் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் டச்சு தூதரகம் தெரிவித்துள்ளது.
இவானா தனது 15 வயதில் 2014ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் சூப்பர்மாடல் தேடல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இவரது மரணத்தில் மர்மம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.