வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிகிச்சைக்காக சென்னையில் புழல் சிறைக்கு நேற்றைய தினம் மாற்றப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டதால் அவர் அவ்வப்போது வேலூர் மற்றும் சென்னை அரசு பொதுமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு மேல்சிகிச்சை அளிக்க வேண்டுமென வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.
அதனால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஏடிஜிபி அலுவலகம், அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது.
அதனடிப்படையில், வேலூர் மத்திய சிறையில் இருந்த பேரறிவாளன் பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் நேற்றையதினம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.