இஸ்ரேல் பயரங்கரவாத நாடு என்றும், ஆக்கிரமிப்பு நாடு என்றும் துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன்,
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசலேமைப் பாலஸ்தீனத்தின் தலைநகராக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தக் கோரிக்கையை முஸ்லிம் நாடுகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் பேசிய பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பன்னாட்டுச் சட்டத்தை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.