Loading...
நடிகர் சங்க பொதுச் செயலாளர் விசால் வருத்தம் தெரிவித்ததால் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவைத் தான் திரும்பப் பெறுவதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விசால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததற்கு எதிராக பொன் வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் பொன் வண்ணன் முடிவை ஏற்காத நடிகர் சங்க தலைவர் நாசர் சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.
Loading...
இதனை தொடர்ந்து இன்று பேசிய பொன்வண்ணன், நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசாமால் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் மூத்த நடிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டதால் ராஜினாமா முடிவை திரும்ப பெறுவதாக பொன்வண்ணன் கூறியுள்ளார்.
Loading...