Loading...
இலங்கையும், நோர்வேயும் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளை ஒஸ்லோ நகரில் நடத்தியுள்ளன.
இதன் போது இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.பிரசாத் காரியவசம், நோர்வே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நாயகம் வேகர் ஸ்ட்ரோமனை சந்தித்துள்ளார்.
Loading...
நோர்வேயின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து அவர்கள் மீளாய்வு செய்தனர்.
இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தல் தொடர்பான வழிமுறைகள் குறித்தும் இரு செயலாளர்களும் கலந்துரையாடினர்.
Loading...