நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் 26-ம் திகதி தொடக்கம்; மீண்டும் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வி.எம்.சுதாகர், அனுமதியும், பந்தோபஸ்து பாதுகாப்பும் அளிக்குமாறு கோரி காவல் ஆணையருக்கு கடந்த 8-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள அந்த கடிதத்தின்படி, எதிர்வரும் 26-ம் திகதி முதல் 31-ம் தேதி வரை தினந்தோறும் மாவட்ட வாரியாக ஆயிரம் ரசிகர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் குறிப்பிட்ட திகதிகளில் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக அறிவித்த நிலையில் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது