ஃபேஸ்புக், மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளுக்காக தங்களுக்கு பணம் தர வேண்டும் என செய்தி நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஃபேஸ்புக், மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் செய்திகளை அதன் வாடிக்கையாளர்களுக்குப் பகிர்வதால் பெறும் விளம்பரங்கள் மூலம் பல நூறு கோடி ரூபாய் வருமானம் பெறுவதாக ஏ.எஃப்.பி. உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
தங்களின் ஊழியர்களுடைய உழைப்பில் பெறப்படும் செய்திகளை, ஒரு செய்தியாளரோ, அல்லது செய்தி ஆசிரியர்களோ, மற்றும் ஸ்டூடியோ வசதியோ இல்லாத கூகுள், மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பிரதி செய்வதாக செய்தி நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.
எனவே, தங்கள் செய்திகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு குறிப்பிட்ட சதவீத தொகையை வழங்க வேண்டும் எனவும் செய்தி நிறுவனங்கள் கோரிக்கை முன் வைத்துள்ளன.