கைதடி அரச முதியோர் இல்லத்தில் பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ர்றித்த இல்லத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அதிகளவில் கைவிடப்பட்ட முதியவர்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டு வருவதாலேயே குறித்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதியோர் இல்லத்தில் முதியோர்களை சேர்பபது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இல்ல அத்தியடசகர் த.கிருபாகரன் தெரிவித்தார்.
தற்போது இல்லத்தின் விடுதிகளில் 220 வரையிலான முதியவர்கள் தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உறவினர்களால் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட முதியவர்களும் மற்றும் வீதிகளிலும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அநாதரவாகவுள்ள முதியவர்களுமே சில நாட்களாக முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டு வருவதாக த.கிருபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு கைவிடப்பட்டு அநாதரவாகச் சேர்க்கப்படும் முதியவர்களினால் இல்லத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் இந்நிலையில் முதியவர்களைச் சேர்த்துக் கொள்வது தற்போது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.