இலங்கை காவல்துறையினர் மற்றும் இலங்கை மத்திய வங்கியும் நிதிக்குற்றச்செயல்கள் தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையில் மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப்பிரிவும் இலங்கை காவல்துறையும் குறித்த விடயம் தொடர்பிலான தகவல்களை பரிமாறிக்கொள்வதுடன் பணத்தை தூய்மையாக்கும் சட்டத்தின்கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்கே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த உடன்படிக்கையில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப்புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் எச் அமரதுங்க ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியும் கலந்துகொண்டுள்ளார்.