அறிவின் அடிப்படையில் அமையப்பெற்ற சமூகத்தினை கட்டியெழுப்புவதற்காக அரிப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன் போதே மைதிரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பட்டங்களைப் பெற்றுக்கொண்ட சகல பட்டதாரிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி நேர்மை, தைரியம் மற்றும் போராட்ட குணத்துடன் கல்வியும் ஒன்றிணைந்து காணப்படும் இராணுவ வீரர்களே சகல துறைகளிலும் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.