சுவிஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி காரணமாக, அடுத்த ஆண்டில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும் என கருத்துக்கணிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுவிட்சர்லாந்து பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 2018ம் ஆண்டின் முதல் அரையாண்டில் வேலை வாய்ப்புகள் 3 சதவீத அளவில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியும், சுவிஸின் பிராங்கின் மதிப்பு பலவீனமானதுமே குறித்த வேலை வாய்ப்புகள் உருவாக காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சுவிட்சர்லாந்து முழுவதும் ஒரே சீராக இந்த வேலை வாய்ப்புகள் இருக்காது எனவும், ணுரசiஉh மாகாணத்தில் மட்டும் 7 சதவீத நிறுவனங்கள், அதிக அளவில் ஆட்களை வேலைக்கு சேர்க்க உள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.