நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளினால் வேட்பு மனுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தகுதியற்ற வேட்பாளர்கள் சம்பந்தமாக பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 93 உள்ளூராட்சி சபைகளுக்காக அரசியல் மற்றும் சுயாதீன குழுக்கள் ஊடாக நேற்று ஒப்படைக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 23 நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
11 அரசியல் கட்சிகளின் 19 வேட்பு மனுக்கள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் 04 வேட்பு மனுக்களும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி, வேட்பு மனுக்களை தயார்படுத்தும் போது அரசியல் கட்சிகள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.