Loading...
இலங்கைக்கு உரித்தான பறவைகளின் புகைப்படங்களை அச்சிட்ட புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த முத்திரைகள் தபால் திணைக்களத்தின் முத்திரைகள் பணியகத்தினால் வெளியிடப்படவுள்ளது.
Loading...
சுற்றுலாத்துறையை வெளிக்காட்டும் முத்திரை அச்சிடல் திட்டத்தின் கீழ் குறித்த முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு உரித்தான நான்கு பறவைகளின் புகைப்படங்களுடன் குறித்த முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளன.
ரூபா 4, 10, 15, 35 ஆகிய பெறுமதிகளுடன் அச்சிடப்பட்டிருக்கும் குறித்த முத்திரைகளின் வெளியீடு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஹலீம் தலைமையில் நாளை தலவதுகொட ஈரவலய பூங்காவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...