ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்பையும் இலங்கை அரசாங்கம், கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் புதுடெல்லியில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்களால் எழுப்ப பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரவீஸ் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை உடனான உறவுகளின் வலிமை மற்றும் உறுதியான தன்மை குறித்து இந்தியா உண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ரவீஸ் குமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையுடனான தமது உறவுகள் சொந்த காலிலேயே உள்ளதென தெரிவித்த ரவீஸ் குமார் இரு நாட்டு உறவுகள் எந்தவொரு மூன்றாவது நாட்டிலும் தங்கியிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கள் தொடர்பான விடையங்கள் குறித்து இந்திய இலங்கையுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் ரவீஸ் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.