தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின்குரல், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினொராம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமையகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று வியாழக்கிழமை (14) மாலை நான்கு மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தேசத்தின் குரலின் திருவுருவப்படத்திற்கு ஈகைச் சுடரேற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்த்தப்பட்டது.
தொடர்ந்து, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தொடர்பான நினைவு உரைகளும் இடம்பெற்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கம், இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப்புலிகள் சார்பாக பல பேச்சுவார்த்தைகளின் தலைமைப் பொறுப்பினை வகித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.