வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னின் நெருங்கிய நண்பரும் அநாட்டு ராணுவத்தில் மிக உயர்ந்த பதவி வகித்தவருமான ஹ்வாங் பியாங்-சோ என்பவருக்கு ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வட கொரியா ராணுவத்தில் தலைமை மார்ஸலாக பதவி வகித்த ஹ்வாங் பியாங்-சோ என்பவருக்கு எதிராக சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 13-ம் திகதியில் இருந்து அவர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அரசு கொலையாளிகளால் ஹ்வாங் பியாங்-சோ சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முன்பு நாய்களுக்கு நடுவில் தள்ளிக் கொல்வது போன்று ஆளில்லா உளவு விமானம் மூலமாக தாக்கிக் கொல்வது என நூதனமான வகையில் தனது அரசியல் எதிரிகளை கொன்று குவித்துள்ள வடகொரியா ஜனாதிபதி ரகசியமாக ஹ்வாங் பியாங்-சோ கொன்றிருக்கலாம் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.