ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம் யாழப்பாணம்; கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன.
குறித்த திட்டத்திற்காக 27 கோடி அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல் வடமத்திய மாகாணங்களிலும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலும் 2014 ஆம் ஆண்டு முதல் அமுலாகியுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டங்களின் மூலம் குடா நாட்டில் நகர பிரதேசங்களின் சுகாதாரமும் ஆளணி வளமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 308 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகளும் 308 கிலோ மீற்றர் நீளமான தேசிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான மொத்த முதலீடு 90 கோடியே 60 இலட்சம் அமெரிக்க டொலர்கள் எனவும் வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டம் தற்சமயம் அமுலாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.