இலங்கையில் மனைவியின் விருப்பமின்றி அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கினால் தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டமூலம் விரைவில் நிறைவேற்றபடவுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளதாகவும் நீதியமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.
பொழும்பில் ஊடகமொன்று தகவல் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடையம் தொடர்பான சட்டத் திருத்தம் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தலதா அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.
திருமணத்தின் பின் மனைவியுடன் உடல் ரீதியாக உறவு கொள்வது கணவனின் விருப்பமாகவே கருதப்பட்டு வருவதாக தெரிவித்த தலதா அத்துகோரள ஆனால் இந்த நடவடிக்கையில் தற்பொழுது மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மனைவியர் மீதான பாலியல் துன்புறுத்தல் வீட்டு வன்முறையாகவே கருதப்படவேண்டியுள்ளதகவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
இதே நேரம் திருமணத்தை பாலியல் கொடுமைகளை மேற்கொள்வதற்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளமுடியாது என தெரிவித்த தலதா அத்துகோரள எனினும் இவ்வாறான செயற்பாடுகள் குற்ற செயல்களாகவே கருதமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மதம் மற்றும் கலாசார நம்பிக்கைகள் காரணமாக பெண்கள் கணவனுக்கு எதிராக இதுபோன்ற வன்முறைகளுக்காக முறைப்பாடுகள் மேற்கொள்வதில்லை எனவும் தலதா அத்துகோரள கவலை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய ஜீ.எஸ்.பி வரிச் சலுகை தொடர்பான நிபந்தனையில் திருமணத்தின் பின்னரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தலதா அத்துகோரள
இது தொடர்பாக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.