சரியான முறையில் தேர்தல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத்தெரியாத சிலரே நாட்டின்; அரசியல் தலைமைத்துவத்தை கேட்பதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க விமர்சித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிவரும் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் சாகல ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தை நேற்று மாலை அமைச்சர் சாகல ரத்னாயக்க நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த வைத்தியசாலை 30 ஏக்கர் காணியை கொண்டுள்ளதோடு 500 கட்டில்களை கொண்ட வைத்தியசாலை அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அமைச்சரின் இத்திட்டத்திற்கு பிக்குகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் போது பௌத்த பிக்குகள் பலரும் பிரதேசவாசிகளும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சாகல ரத்நாயக்க ‘மொட்டு கட்சியின் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று மாத்தறையின் வெலிகம பிரதேசத்திலும் நிராகரிக்கப்பட்டது. அதிகாரம் பெற்றவருடன் சென்றவரே மனுவை தாக்கல் செய்ததினால் அந்த வேட்பு மனு இறுதியில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சிலவற்றில் பெயர் எழுத மறந்து இருக்கிறார்கள். இன்னும் சில வற்றில் கையொப்பமிட தவறியிருக்கிறார்கள்.
தேர்தல் அலுவலகத்திற்கு சென்ற பின்னர் முதலாவது சந்தர்ப்பம் கொடுப்பார்கள் விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால் சரிபார்ப்பதற்கு. ஆனால் இதைக்கூட சரியாக செய்யத்தெரியாதவர்களா இந்த நாட்டின் தலைமைதுவத்தை கேட்கிறார்கள்? உண்மையை சொன்னால் தேர்தல் விண்ணப்பத்தை பூரத்திசெய்து கொடுக்கமுடியாத கட்சி எப்படி நாட்டை ஆட்சிசெய்யுமெனவும் அமைச்சர் கேள்விஎழுப்பியுள்ளார்.