இந்தோனேசியாவில் ஜாவா தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜாவா சுமாத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் சுமார் 20 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்திகளில் குறித்த நிலநடுக்கத்தால் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கினால் அதில் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது பற்றிய விபரங்கள் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள டாசிக்மாலயா, பன்கன்ட்ரன் மற்றும் சியாமிஸ் பகுதிகளில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 40-ற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.