Loading...
நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை இணைந்துள்ளமையானது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக அமையும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆயுதத்துறைக்கான பணிப்பாளர் ஸ்டீவ் கூஸ் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை ஏனைய நாடுகளையும் குறித்த உடன்படிக்கையில் இணைவதற்கான தூண்டுதலை வழங்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Loading...
2015ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை இந்த உடன்படிக்கையில் இணைந்துக்கொள்ளும் விருப்பத்தை வெளியிட்டிருந்தது.
குறித்த உடன்படிக்கையில் அமெரிக்கா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஸ்யா உட்பட்ட 33 நாடுகள் இன்று கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...