Loading...
முகாந்திரம் இருந்தால் நடிகர் விஜயின் அப்பாவும் டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார்.
Loading...
இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஸ் மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Loading...