சற்று முன்னர் இலங்கை தமிழரசுக் கட்சியில் சாவகச்சேரி தொகுதியில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகுவதாக வெளியாக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் முரண்பாடு நிலையொன்று தோன்றியுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக தீர்மானித்து, கட்சித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு கடிதம்மூலம் தமது தீர்மானத்தை அவர்கள் அறிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி தொகுதி தலைவர் க.அருண்தவபாலன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஏழு பேர் இன்று கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காசிலிங்கம் சற்குணதேவன் மற்றும் கந்தையா மயில்வாகனம் ஆகியோரே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாட உள்ளதாகவும் கந்தையா மயில்வாகனம் மேலும் தெரிவித்துள்ளார்.