Loading...
நாட்டின் பல பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணி தொடக்கம் 5 மணி வரை குறித்த விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமையவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தள்ளனர்.
Loading...
குறித்த தேடுதல் நடவடிக்கையில் 14 ஆயிரத்து 706 காவல் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தடைசெய்யப்பட்ட விச போதை பொருட்களை வைத்திருந்த 586 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...