பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த மேயர்தர அதிகாரி ஒருவருடன் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி காதல் தொடர்பில் இருப்பதாக அறிந்த மாணவியின் தாயார் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் வீட்டுக்கு இராணுவ மேயர் சிவில் உடையில் சில தடவைகள் வந்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி தனது மருத்துவபீடத்தைச் சேர்ந்த சிங்கள நண்பன் என மாணவியின் தாயாரை குறித்த மாணவி ஏமாற்றி வந்துள்ளார்.
மருத்துவ பீட நண்பன் என அறிந்த தாயார் இது தொடர்பாக அக்கறை காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திருமணமாகி இன்னோர் இடத்தில் வசித்து வந்த அரச உத்தியோகத்தரான மாணவியின் அண்ணன் தனது தங்கையிடம் வந்து போகும் குறித்த சிங்கள இளைஞன் தொடர்பாக கேட்டு அறிந்த பின்னர் அண்ணன் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே அந்த சிங்கள இளைஞன் மருத்துவபீட மாணவன் அல்ல என அறிந்துள்ளார்.
இந் நிலையில் மருத்துவபீட மாணவியான தனது தங்கையை இது தொடர்பாக கேட்டு சண்டையிட்ட போதே வந்த இளைஞன் மருத்துவபீட மாணவன் அல்ல சிங்களப் படை அதிகாரி என்ற குட்டு வெளிப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தங்கையை கடுமையாக அண்ணன் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
தனது மகளின் காதல் தொடர்பாக அதிர்ந்த தாயார் தூக்க மாத்திரைகளை அள்ளி விழுங்கி தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
மாணவியின் தந்தை ஓய்வு பெற்ற அரச அதிகாரி எனவும் தற்போது கொழும்பில் பிரபல பால்மா நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.