மலேசிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரவித்தார்.
அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஏப்ரல் மாதம் 52 நாடுகள் பங்கேற்கும் பொதுநலவாய மாநாட்டின் பங்கேற்பு நாடுகளில் மலேசிய தலைமைத்துவம் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே இவரது இவ்விஜயம் அமைந்துள்ளது.
இவ்விஜயத்தின் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட தலைவர்களை சந்திக் கவுள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனையும்,
சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மலேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.