விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதற்கான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் ஒன்றரை மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்திய அணியில் வாசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியில் திரிமானே நீக்கப்பட்டு சதீரா சமரவிக்ரம சேர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.