சர்வதேச பிரதிநிதிகளால், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் செலுத்தும் அவதானம், இலங்கை இராணுவத்தினருக்கு கிடைப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொட்டாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கொமாண்டர் தஸநாயக்கவின் மகள், தமது தந்தையின் மனித உரிமை மீறல் குறித்து அவர்களிடம் முறையிடச் சென்றுள்ளார்.
எனினும், அதனை ஏற்க தமக்கு அதிகாரமில்லை என ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறியதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், யுத்த வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து கவனம் செலுத்த எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.