பாகிஸ்தானில், கூகுள் தேடலில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் இந்தியாவின் விராட்கோலி முதலிடத்தை பிடித்துள்ளமையானது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. 29 வயதாகும் இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டில் கூகுள் தேடலில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானை ஆச்சர்யப்பட வைத்த இந்திய வீரர் விராட்கோலி!
இந்த சம்பவமானது பாகிஸ்தான் மக்கள் அனைவரும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விராட்கோலியின் தலைமைபண்பு குறித்தும் அவர் விளையாடும் விதம் குறித்தும் பாகிஸ்தான் மக்கள் புகழ்ந்துள்ளார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை, முகமது அமீர், மொஹமது சேசாத் பெற்றுள்ளனர்