சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் யானிக் பட்டட் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாடுகளை ஒப்புக்கொண்டுள்ளதுடன் பதவி விலகியுள்ளார்.
சுவிஸின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் யானிக் பட்டட் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து மருத்துவ ஓய்வு பெற்றிருந்த நிலையிலேயே அண்மையில் அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் அவரின் முன்னாள் காதலி மற்றும் அவருடன்; பணிபுரியும் சக ஊழியர் உள்ளிட்ட பெண்கள், பட்டட் தங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை தந்து வருவதாக புகார் அளித்தனர்.
எனினும் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னரும்; பட்டட் தங்களுக்கும் பாலியல் தொந்தரவுகளை தந்ததாக பத்திரிக்கைத் துறை மற்றும் அரசியலில் ஈடுபட்டு வரும் பெண்கள் சிலரும் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தனது கட்சி பதவியை இராஜினாமா செய்த பட்டட் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பட்டட்டின் சட்டத்தரணி யானிக் பட்டட் சமீப காலமாக மது பழக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் குற்றம் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பட்டட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடும்ப சூழல் காரண்மாகவே பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவே ராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன் புகைப்படத்தை தானே கண்டறிய முடியாத சூழ்நிலையில் தன் உடல்நலம் உள்ளதாகவும் ஆகையால் முதலில் தனக்கு தேவை சிகிச்சை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த குற்ற வழக்கின் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை எனவும் பட்டட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரித்துள்ளார்.