செங்குத்தாக பயணிக்கும் ரோப் கார் வடிவிலான தொடரூந்து சுவிஸில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
நாட்டின் Schywz நகரிலிருந்து மலை கிராமமான Stoos வரையில் அமைக்கப்பட்டுள்ள தொடரூந்து தடத்தில் செல்லும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
$53 மில்லியன் பொருட்செலவில் உருவாகியுள்ள குறித்த தொடரூந்து திட்டத்தை நாட்டின் ஜனாதிபதி டோரிஸ் லுத்தார்ட் திறந்து வைத்துள்ளார்.
தரை பகுதியிலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடரூந்து பாதையில் பயணிக்கும் குறித்த தொடரூந்தானது 110 சதவீதம் அளவில் செங்குத்தாக பயணிக்கும் திறன் கொண்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாண்டுகளுக்கு முன்னரே குறித்த திட்டம் திறக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் நிதி பிரச்சனை காரணமாக தாமதாக திறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரூந்து திட்டத்தை அமைத்த அமைப்பாளர்களை பாராட்டிய டோரிஸ், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல சேவையை அளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.