கனடா – டெல்டா பகுதியில் உள்ள வயல் ஒன்றில் பணியாற்றிய 43 க்கும் அதிகமானோர் நச்சுவாயு ஒன்றின் தாக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் குறித்த பகுதியில் உள்ள விண்சட் பார்ம்ஸ் எனப்படும் வயலில் ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அங்குள்ள இயந்திரம் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து குறித்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய கார்பன் மொனாக்சைட் எனப்படும் நச்சுவாயுவினை சுவாசித்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வண்டிகளோடு வந்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் ஆபாய நிலையை கடந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாயு தாக்கம் காரணமாக உடலில் உள்ள ஆக்சிஜன் பிராணவாயுவின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாலேயே சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இரத்த மாதிரிகளை எடுத்து சிகிச்சைகள் தொடரப்பட்டு வரும் அதே சமயம், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.