Loading...
யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை இமானுவேல் ஆனொல்ட் கடந்த 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தம்மிடம் கையளித்துள்ளதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த பதவி விலகல் முறைப்படியாக தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்படி இவ் பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பேரவை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
Loading...