சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21 அன்று இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்தல் விதி மீறு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பரபரப்பாக நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியோடு முடிவடைகிறது.