Loading...
ஒன்றாரியோ பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் ஆறுவயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள விடயம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் குறித்த பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சாலைத்தடுப்புச் சுவரின் மீது மோதி நொருங்கியுள்ளது.
Loading...
அப்போது காரில் கர்ப்பிணிப்பெண் மற்றும் ஆண், ஆறு வயது சிறுவன் உட்பட மூவர் பயணித்துள்ளனர். விபத்தை தொடர்ந்து மீட்கப்பட்ட மூவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய இருவரும் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஒன்றாரியோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...