உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேசசபைகளுக்குமான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது.
குறித்த வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் முகவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசபையில் 21 வட்டார வேட்பாளர்களும், 17 விகிதாசார முறை வேட்பாளர்களும், பூநகரி பிரதேசசபையில் 11 வட்டார வேட்பாளர்களும், 10 விகிதாசார முறை வேட்பாளர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் 8 வட்டார வேட்பாளர்களுமாக மொத்தம் 75 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பு மனு தாக்கலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன், மாகாணசபை உறுப்பினர்கள் த.குருகுலராஜா மற்றும் சு.பசுபதிப்பிள்ளை, வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.