தமிழ்நாட்டில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதாவின் விடியோ வெளியிடப்பட்டிருப்பது விதிமீறல் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட விடியோவை, டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த விடியோ வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கருத்துக் கூறிய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி, ஒரு கட்சிக்கு தலைவராக இருந்தவரின் விடியோ வெளியாகியிருப்பது பரப்புரையாகவே கருதப்படும்.
நேற்று மாலையுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில், இன்று இந்த விடியோ வெளியிடப்பட்டிருப்பது விதி மீறல் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், ஏற்கனவே பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில்,
இந்த விதி மீறலுக்கு தேர்தல் ஆணையம் எந்த விதமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.