ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 2.0 படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்த் முதன்முதலில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த, ‘மன்னன்’ திரைப்படத்தில் ‘அடிக்குது குளிரு’ என்ற பாடலை பாடினார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘கோச்சைடையான்’ படத்தில் ஒரு பாடலை பாடினார்.
ஒரு இசை நிகழ்ச்சிக்காக ரஜினியை மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பாட வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைப் பயணத்தை தொடங்ககி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக இந்த நிகழ்ச்சியா என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்ட போது அவர் தில்லியில் பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
டிசம்பர் 23-ம் தேதி அன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான அரங்கில் நடைபெறம் என்ற தகவல் உண்மைதான்.
ஆனால் அந்நிகழ்ச்சி நாடக மேதை ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்களின் 100-வது பிறந்த தினத்தை சிறப்பிக்க, அவரது பேத்தியும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகளுமான மதுவந்தி அருண் ஒருங்கிணைக்கும் இசை நிகழ்ச்சி அது என்று கூறினார்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் ஆனால் அந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானுடனுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடவிருக்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றனர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.