சுவிட்சர்லாந்தில் விபத்தில் பலியான ஜேர்மன் இளைஞனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக மக்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் Gotthard Tunnel கடந்த வாரம் நடந்த விபத்தொன்றில், ஜூலியஸ் என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ட்ரக் ஒன்றுடன் மோதி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் ட்ரக்கை ஓட்டி வந்த ஓட்டுநரும் மரணமடைந்தார், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜூலியஸ் ஜேர்மனியின் டுöசசயஉh எனும் இடத்தைச் சேர்ந்தவர், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ஜூலியஸின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரத்தேவையான 7,000 ப்ராங்கை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இதை அறிந்த ஊர் பொதுமக்கள், ஜூலியஸின் கால்பந்து அணியினர் மற்றும் அவர் வேலை செய்த மருத்துவமனையை சேர்ந்தவர்கள் தேவையான பணத்தை அளிக்க முன்வந்தனர்.
இதையடுத்து ஜூலியஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மக்களின் இந்த அனுதாபம் கலந்த அன்பு தங்கள் இதயத்தைத் தொட்டதாகக் கூறி நெகிழ்ச்சி அடைந்தனர்.