நடுத்தர வர்க்க கனேடியர்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் லிபரல் கட்சி சரியான பாதையில் பயணிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் முகமாக கடந்த திங்கட்கிழமை வெளியாகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாக ஜஸ்ரின் ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பிரிட்டிஸ் கொலம்பியா, தெற்கு சர்ரே-வைட் ரொக் பகுதியை கன்சர்வேற்றிவ் கட்சியிடமிருந்து பறித்துக் கொண்ட லிபரல், நியூபவுண்லான்ட் மற்றும் ரொறன்ரோவின் ஒரு பகுதியிலும் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டது.
எனினும் சஸ்கற்றுவானில் கன்சர்வேற்றிவ் தமது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டதுடன் கனடாவின் லிபரல் அரசு சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.