நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய கொடிய நோயினால் பாதிப்படைந்துள்ள கனேடியச் சிறுவனுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வின்னிபெக் மாகாணத்தில் வசிக்கும் sheldon steuart என்ற 10 வயதுச் சிறுவனுக்க கொடிய நோய் பீடித்துள்ளதால் நடமாட முடியாத நிலையில் உள்ளார்.
இது குறித்துக் கேள்விப்பட்ட தனியார் தொண்டு நிறுவன இயக்குநர் jody zarn பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்மூலம் பாதிக்கப்பட்ட குறித்த சிறுவனிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கத் தீர்மானித்த அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறித்த சிறுவனிற்கு வாழ்த்து அட்டைகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனால் பலர் அந்தச் சிறுவனிற்கு வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் தொடர்ந்தும் அனுப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.