தகவலறியும் உரிமைச்சட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக கருதப்பட்டாலும் நல்லாட்சி என்ற விடயத்தில் மிக அத்தியாவசியமாக உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் பொது மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக அல்லது வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டியவர்கவே உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களில் தகவல் உத்தியோகத்தர்களாக செயற்படுபவர்களுக்காக மட்டக்களப்பில் மூன்றுநாள் பயிற்சி நெறியின் நிறைவு நாள் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில்;; இன்னமும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு முக்கியத்துவம் அழித்துச் செயற்படாத நிலை இருந்ததை எல்லோரும் அறிந்துள்ளார்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 12 ஆம் இலக்க 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் படி இலங்கையில் முக்கியமானதொரு சட்டமாக இது கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையில் நல்லாட்சியில் மக்களுடைய உரிமை என பாதுகாக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக பல்வேறு நல்ல அம்சங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
பொதுமக்களுக்கு தேவையான விடயங்களை அரச நிறுவனங்கள், பொது நிறுவனங்களிடமிருந்து அறிந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடாக இது அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தங்களுடைய நிர்வாகத்தில் இருக்கின்ற சில நல்ல பண்புகளை மேம்படுத்துவதற்கு தகவல் அறியும் சட்டம் வகை செய்யும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நம்பிக்கை வெளியிட்டள்ளார்.
நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டாலும் உலகின் ஏனைய நாடுகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
.