மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியின் காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள 13 வீடுகள் சேதமடைந்துள்ளன.
குறித்த மினி சூறாவளியின் காரணமாக 13 வீடுகள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதோடு, 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மேலும் குறித்த மினி சூறாவளியில் சிக்கி தூக்கி வீசப்பட்ட குறித்த கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறிய கடை ஒன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
13 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதோடு, சேதமடைந்த வீடுகளை சீர் செய்து வருகின்றனர்.
குறித்த கிராம மக்களின் பாதிப்புக்கள் குறித்த மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.