இந்தியாவுக்கான சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இரண்டு டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் முதலாவது போட்டி கட்டாக் நகரில் இன்று ஆரம்பமாகியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அதன்படி, ரோகித் சர்மா மற்றும் லோகேஸ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
5-வது ஓவரில் மேத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.
இறுதி கட்டத்தில் துடுப்பாட்டத்தில் மணிஸ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ஓட்டங்ளை எடுத்தது.
இந்திய அணிசார்பில் அதிகபட்ச ஓட்டமாக லோகேஸ் ராகுல் 61 ஓட்டங்களை எடுத்தார்.
இதனையடுத்து, 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது
ஆரம்பம் தொடக்கம் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 75 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
இறுதியில் 16 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை இலங்கைஅணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க இன்று உத்தியோக பூர்வமாக அவரது பொறுப்புக்களை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.